Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பென்ஷன் தொகை தர 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது

Webdunia
சனி, 28 ஏப்ரல் 2018 (11:25 IST)
பென்ஷன் நிலுவைத் தொகை வழங்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜேஸ்வரி(83). இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் தனது ஓய்வுத் தொகையை அலுவலகத்திற்கு சென்று நேரில் வாங்க முடியாததால் தனது தம்பி பத்மராஜ் என்பவரை கார்டியனாக நியமித்து, தம்பியிம் மூலம் ஓய்வுத் தொகையை பெற்று வந்தார்.
 
80 வயது தாண்டினால், பென்ஷன் தொகையில், 20 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும். மூன்று ஆண்டுகளாக கூடுதல் தொகை நிலுவையில் உள்ளது. இதை பெற பத்மராஜ் செய்யாறு சார்நிலை கருவூல அதிகாரி ஷாகிதா(37)வை நாடியுள்ளார். அதற்கு அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். 
இதனையடுத்து பத்மராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பத்மராஜிடம், 10 ஆயிரம் ரூபாயை, ஷாகிதா வாங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஷாகிதாவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞரின் பெயரைச் சூட்ட முயல்வதா? அன்புமணி கண்டனம்..!

காசாவை கைப்பற்றினால் டிரம்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்.. பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை..!

பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை.. மபி முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments