சொத்துக்காக கணவனை கடத்த முயன்ற மனைவி

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (08:21 IST)
நாமக்கல்லில் சொத்துக்காக கணவனை கடத்த முயன்ற மனைவியை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல் ஏ.எஸ் பேட்டை முல்லை நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. செல்வராஜ் பைனாஸ் தொழில் நடத்தி வருகிறார். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையால், அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சொத்து அனைத்தையும் தன் பெயரில் எழுதி வைக்கும்படி ராஜேஸ்வரி கூறியதால் தான் இருவருக்கும் இடையே தகராறு என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்று 4 பேர் கொண்ட கும்பல் செல்வராஜை கடத்தி சொத்து அனைத்தையும் ராஜேஸ்வரிக்கு மாற்றும்படி மிரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த செல்வராஜ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக அந்த 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்ததில், ராஜேஸ்வரி தான் இப்படி செய்ய சொன்னார் என கூறினர்.
இதனையடுத்து போலீஸார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். விஷயமறிந்து தலைமறைவான ராஜேஸ்வரியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

படப்பிடிப்புக்கு மட்டும் சரியான நேரத்தில் போனால் போதுமா? மக்களுக்காக போக வேண்டாமா? விஜய்க்கு பிரேமலதா கேள்வி..!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி.. நேரில் சென்று பார்த்த அன்புமணி..!

காலையிலேயே காத்திருக்கும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்?

முடிஞ்சா மீண்டும் பாகிஸ்தானோடு போரிடுங்கள்! - இந்தியாவை சீண்டிய பாக்.ராணுவ மந்திரி!

37 மாவட்டங்களை இரவில் செய்யப்போகும் கனமழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments