கோவிலில் பலே திருட்டு.. ஆனால் அசந்து தூங்கியதால் சிக்கிய திருடன்!

Prasanth K
வியாழன், 19 ஜூன் 2025 (10:39 IST)

கோவையில் கோவிலில் திருடிவிட்டு, அங்கேயே படுத்துத் தூங்கிய திருடன் பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை புதூர் பகுதியில் பால விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அங்கு கோவில் குருக்கள் வழக்கம்போல காலையில் சென்று கதவை திறந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதேசமயம் உண்டியலுக்கு சற்று தொலைவில் ஒரு நபர் மதுபோதையில் முழுத் தூக்கத்தில் இருந்தார். திருடிய பணம் அவரிடம் இருந்துள்ளது.

அந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்த நிலையில், அவர் காரைக்கால் நெடுங்காடு பகுதியை சேர்ந்த சின்னையன் என்பது தெரிய வந்துள்ளது. காரைக்காலில் பல திருட்டு வழக்குகள் ஏற்கனவே அவர் மீது உள்ளது.

 

புதூரில் வாடகை வீடு எடுத்து கட்டிட வேலைகளுக்கு சென்று வந்த சின்னையன் பால விநாயகர் கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து 8 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளார். மேலும் கோவிலில் இருந்த சில பொருட்களையும் திருடியுள்ளார். புறப்பட இருந்த நேரத்தில் மழை பெய்ததால், மழை நின்றதும் கிளம்பலாம் என ஒரு ஓரமாக படுத்தவர் நன்றாக அசந்து தூங்கியுள்ளார். அதனால் காலையில் அவராகவே மாட்டுக் கொண்டுள்ளார். 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்கவுன்ட்டர் செய்து விடுவேன் என மிரட்டி ரூ.100 கோடி குவித்த டிஎஸ்பி.. விசாரணையில் அதிர்ச்சி..!

நியூயார்க் நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயர்.. முதல் முஸ்லீம் மேயரும் கூட..!

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments