ஆவின் பால் பாக்கெட் விலை திடீர் உயர்வு! – பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2023 (09:43 IST)
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில் குறிப்பிட்ட பால் பாக்கெட்டுகளின் விலை உயர்வை சந்தித்துள்ளது.



பொதுத்துறை நிறுவனமான ஆவின் பல்வேறு நிற பாக்கெட்டுகளில் டோண்ட் பால் பாக்கெட்டுகளை வெவ்வேறு அளவுகளில் விற்பனை செய்து வருகிறது. கால் லிட்டர் தொடங்கி அரை லிட்டர், ஒரு லிட்டர், 5 லிட்டர் என பல அளவுகளில் பால் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன.

இதில் 5 லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் பெரும்பாலும் டீக்கடைகளால் வாங்கப்படுகின்றன. நேற்று வரை 5 லிட்டர் எடைக்கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் ரூ.210க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ.10 உயர்ந்து ரூ.220 ஆக விற்பனையாகி வருகிறது.

இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களுக்கும், தேநீர் கடை உரிமையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது டீ, காபி விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு டிராபிக்கில் பயணம் செய்வதை விட விண்வெளியில் பயணம் செய்வது எளிது: விண்வெளி வீரர் கிண்டல்

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை முன்னறிவிப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆவணங்கள் தேவையா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments