Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏண்டா லேட்டா வந்த என்று கேட்டதால் 10 வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி

Webdunia
சனி, 14 ஜூலை 2018 (12:50 IST)
காஞ்சிபுரத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை ஆசிரியர் திட்டியதால், மாணவன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 15 வயதில் ஒரு மகன் உள்ளார். அவரது மகன் ரகு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று மாணவன் பள்ளிக்கு தாமதமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வகுப்பாசிரியர் மாணவனை வகுப்பிற்கு வெளியே நிற்கும்படி கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் பள்ளியின் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளான்.
 
உடனடியாக மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments