சேலம் பகுதியில் நில அதிர்வு.. பொதுமக்கள் பீதி

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (11:11 IST)
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் இன்று காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் கடையம்பட்டி பகுதிகளில் இன்று காலை 8.34 மணியளவில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளும், கட்டிடங்களும் சில வினாடிகள் ஆட்டம் கண்டன. இதனால் பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளுக்கு ஓடினர்.  இந்த நில அதிர்வால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, மேட்டூர் அணை நிரம்பியதால் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதே போல் தற்போதும் நில அதிர்வு ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ஒரண்டை இழுத்த பாகிஸ்தான்! - பதிலடி கொடுத்த தாலிபான்!

ஹிண்டென்பெர்க் அறிக்கையால் ரூ.8.8 லட்சம் கோடி இழப்பு! - அதானி வேதனை!

தீபாவளி பயணம்: திடீரென 3 மடங்கு விலை உயர்ந்த ஆம்னி பஸ் டிக்கெட்டுகள்! - பயணிகள் அதிர்ச்சி!

மக்களை காப்பாற்றியதை விட விருது பெரிதல்ல! நோபல் கிடைக்காதது பற்றி மனம் திறந்த ட்ரம்ப்!

மேற்கு வங்கத்தில் இன்னொரு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம்.. மம்தா ஆட்சிக்கு கடும் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments