ஆ.ராசா, பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (10:29 IST)
திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக எதிர்பார்க்கப்பட்டபடியே துரைமுருகனுக்கு கட்சி பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் திமுக சட்டவிதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு 3 துணை பொதுச்செயலாளர்கள் என்ற எண்ணிக்கை 5 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோருக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே திமுக துணை பொதுச்செயலாளராக அந்தியூர் செல்வராஜ், ஐ.பெரியசாமி மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments