Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் ஆ.ராசா, பொன்முடிக்கு துணை பொதுச் செயலாளர் பதவி?

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (18:22 IST)
சமீபத்தில் திமுக பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பதவிகளுக்கு துரைமுருகன் மற்றும் டிஆர் பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லாமல் போனது 
 
இந்த நிலையில் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை அடுத்து தற்போது துணை பொதுச்செயலாளர் பதவிக்கு ஒரு சிலரை நியமனம் செய்ய திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் துணை பொது செயலாளர் பதவிகளுக்கு 5 பேரை நியமிக்கலாம் என கட்சி விதியில் திருத்தம் செய்யவும் முடிவு என தகவல் வெளியாகியுள்ளதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் மூவர் விரைவில் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆ.ராசா பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த பதவிக்கு போட்டியிடவில்லை என மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அரசு கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 560 கவுரவ விரிவுரையாளர்களின் பட்டியல்.. இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர்கள் பணியில் தொடர வேண்டுமானால் தகுதி தேர்வு கட்டாயம் வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments