கோவை கோவில்கள் தீ வைத்த சம்பவம்: ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (20:22 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோவையில் மூன்று கோவில்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கஜேந்திரன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் எந்த கட்சியையும் சாராதவர் என்றும் எந்த அமைப்பையும் சாராதவன் என்பதும் தெரிய வந்தது 
 
இந்த நிலையில் பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் மூன்று கோவில்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் தான் குற்றவாளிகள் என ஹெச். ராஜா தனது டுவிட்டரில் கூறியுள்ளதாகவும், தற்போது கைது செய்யப்பட்டவர் எந்த அமைப்பையும் சாராதவர் என்று தெரிய வந்ததாகவும் இதனால் உண்மைக்குப் புறம்பான செய்தியை பரப்பிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்
 
பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்தவர்களின் இந்த போராட்டம் காரணமாக கோவை காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments