துணைவேந்தரைக் காப்பாற்ற பாரதியார் பல்கலைக்கழகத்தில் முக்கிய தடங்களை அழிக்க முயற்சி

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (09:01 IST)
கோவை பாரதியார் பல்கழைக்கழக லஞ்சப் புகாரில் சிக்கிய துணைவேந்தரை காப்பாற்ற பேராசிரியர்கள் சில ஆவணங்களை தீயிட்டு எரித்ததாக புகார் எழுந்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டு, தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ், பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீது, சந்தேகத்தின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். துணைவேந்தர் கணபதி பொறுப்பேற்ற பின், துப்புரவு பணி முதல் பேராசிரியர் பணியிடம் வரை, 250க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ரூ.80 கோடி வரை லஞ்சம் பணம் கை மாறியதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் விடுதியில், பேராசிரியர் ஒருவர்  துணைவேந்தர் கணபதி பதவியேற்றபின், அவர் நியமித்த பணியிடங்கள் தொடர்பான ஆவணங்களை தீயிட்டு எரித்ததாக புகார் எழுந்துள்ளது.  இந்த ஆவணங்கள் முக்கிய தடயங்களாக இருக்கலாம் எனக் கருதி, லஞ்ச ஒழிப்பு துறையினர் குறிப்பிட்ட பேராசிரியர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments