Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (19:45 IST)
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில் அண்ணாமலையார் கோவில். இந்தக் கோவிலில் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் அம்மணியம்மன் கோபுரம் ஆகிய மூன்று வாயில் வழியாக பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில்,   இன்று நண்பகல் வேளையில், தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரம் வழியாக நபர் ஒருவர்  அனுமதியின்றி  கத்தியுடன் நுழைந்து, அங்கிருந்த பக்தர்களை பயமுறுத்தினார்.

உடனே பக்தர்கள் அங்கிருந்து கத்திக்கொண்டு ஓடினர்.   பின்னர், கோவிலிலுள்ள ஊழியர்களிடம் அவர் தகராறு செய்தார்.

இதுகுறித்து, ஊழியர்கள் அங்கிருந்த போலீஸாரிடம் புகாரளித்தனர்.  எனவே போலீஸார், குடிபோதையில் கத்தியுடன்  நுழைந்த   நபரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

ஒரு சொல்லுக்கு பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என அழைப்பதா? வைரமுத்துவுக்கு பாஜக கண்டனம்..!

மீண்டும் எடப்பாடியுடன் இணைய திட்டமா? டிடிவி தினகரன் கூறிய பதில்..!

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments