ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க புதிய செயலி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (17:15 IST)
ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில்  உள்ள அரசு மற்றும் அரசு நிதி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
ஆசிரியர்கள் பள்ளியில் பணியாற்றும் போது மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகை, மற்றும் பள்ளியில் உள்ள பதிவேடுகள் தற்போது கையால் எழுதி வரும் நிலையில் இனி அனைத்தும் கையால் எழுதுவதை தவிர்த்து கணினி மூலம் கண்காணிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில் இந்த செயலி மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் கணினி மூலம் பதிவு செய்யப்படும் என்றும் அதேபோல் ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதற்கும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களில் இந்த செயலியை டவுன்லோட் செய்து கொண்டு விடுமுறைகளை செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்த விடுமுறையை ஒப்புதல் அளிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments