Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எழுத்தாளரும் தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனருமான ஏ.நடராஜன் காலமானார்

எழுத்தாளரும் தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனருமான ஏ.நடராஜன் காலமானார்
, சனி, 13 பிப்ரவரி 2016 (15:11 IST)
சென்னை பெருங்குடி சிபிஐ காலனியில் வசித்து வந்த சென்னை தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 77.


 

 
ஏ.நடராஜன் உடல் நலக் குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று (12.02.2015) நள்ளிரவு 1.30 மணி அளவில் நடராஜனின் உயிழந்தார்.
 
உயிரிழந்த ஏ.நடராஜன் சென்னை வானொலி நிலைய (தூர்தர்ஷன்) இயக்குனராகவும், பல்வேறு சபாக்களில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர்.
 
ஏராளமான நாவல்கள், சிறு கதைகள் உள்ளிட்டவற்றை நடராஜன் இவர் எழுதியுள்ளார். பிரபல நாதஸ்வர கலைஞரான கிருஷ்ணனின் மூத்த மகள் ரமீலாவை திருமணம் செய்து கொண்ட நடராஜனுக்கு செந்தில்குமார் என்ற மகனும், மாலதி என்ற மகளும் உள்ளனர்.
 
இவரது உடல் நாளை (ஞாயிறு) காலை எடுத்துச்  செல்லப்பட்டு பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
 
இந்நிலையில், உயிரிழந்த நடராஜனுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil