Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொடூரம்: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தாய்

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (11:30 IST)
சென்னையில் பெற்ற மகளுக்கு தாய் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபகாலமாக பெண் பிள்ளைகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதில் கொடுமை என்னவென்றால் பெற்ற தாய் தந்தையரே பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதுதான்.
 
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த குமார் என்பவருக்கு திருமணமாகி 14 வயதில் ஒரு பெண் உள்ளார். குமாரின் மகள் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இந்நிலையில் அந்த சிறுமி தனது தந்தை குமாரிடம் சென்று, அம்மா தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக கூறியிருக்கிறார். இதனால் பேரதிர்ச்சிக்கு ஆளான குமார், தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமாரின் மனைவி, பெற்ற மகளை கொல்ல திட்டமிட்டுள்ளார்.
 
இதனையறிந்த குமார், இந்த விஷயத்தை இப்படியே விட்டுவிடகூடாது என கருதி, இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் குமாரின் மனைவியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அசல் இருக்கும்போது நகலை தேடி ஏன் மக்கள் போக வேண்டும்: விஜய் குறித்து திமுக விமர்சனம்

நடிகைகளை அடுத்து திருநங்கை பாலியல் புகார்.. கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு மேலும் சிக்கல்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான மாணவன் தற்கொலை.. மசோதா நிறைவேறிய அடுத்த நாளே சோக சம்பவம்..!

தெருக்களில் நாய்களை விடலாம், ஆனால்.. உச்சநீதிமன்றம் பிறப்பித்த 5 நிபந்தனைகள்..!

இந்தியாவை குறி வைத்த ChatGPT! விரைவில் இந்தியாவில் அலுவலகம் திறப்பு!

அடுத்த கட்டுரையில்