Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக் டாக்கில் சீன் போட்ட வாலிபர்: தலையிலே தட்டி அரெஸ்ட் பண்ண போலீஸார்

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2018 (09:32 IST)
டிக் டாக்கில் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸுக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீஸார் தலையிலே தட்டி கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வரும் டிக் டாக்கில் இளம் தலைமுறையினர் எந்நேரமும் மூழ்கியுள்ளனர். டான்ஸ் ஆடுவது, மிமிக்ரி என அவர்கள் செய்யும் அக்கப்போருக்கு அளவே இல்லை. சில அடாவடிகள் சீன் காட்டுவதாக நினைத்து சிக்கலில் சிக்குகின்றனர். சமீபத்தில்கூட வாலிபர் ஒருவர்  கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு, பாடலுக்கு டான்ஸ் ஆடும்போது தெரியாமல் கழுத்தை அறுத்துக்கொண்டார்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த வினோத் என்ற வாலிபர் ஒருவர் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸை கண்டமேனிக்கு வசைபாடி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டார். தில் இருந்தா எங்க ஏரியா பக்கம் வா என்றெல்லாம் கூறியிருந்தார். அத்தோடு நிறுத்தாமல் ஆர்வக்கோளாறில் தனது மொபைல் நம்பர், அட்ரஸ்ஸையெல்லாம் அந்த வீடியோவில் கூறியிருந்தான்.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதன்பேரில் போலீஸார் அந்த வெத்து வாலிபரை எலிக் குஞ்சை பிடிப்பது போல பிடித்தனர். பாவம் இப்பொழுது சிறையில் தான் டிக்டாக் செய்து வருகிறார். எதுக்கு இந்த தேவையில்லாத வேலை, எதுக்கு வீடியோ போடனும் எதுக்கு ஜெயிலுக்கு போகணும். இதைப்பார்த்தாவது இவனை மாதிரியான ஆர்வக்கோளாறுகள் திருந்துவார்களா என பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு.. திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments