காதலியின் கற்பை காப்பாற்ற உயிரைவிட்ட காதலன்: திருச்சியில் சோகம்

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (07:43 IST)
திருச்சியில் காதலியின் கற்பை காப்பாற்ற காதலன் உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சின்னக்குளம் பகுதியை சேர்ந்தவர்  தமிழ்வாணன். இவரும் லால்குடி கோதண்டகுறிச்சியை சேர்ந்த ஒரு நர்சிங் மாணவியும் காதலித்து வந்தனர்.
 
இந்நிலையில் தனது காதலியை பார்க்க நினைத்த தமிழ்வாணன் அவருக்கு போன் செய்து குறிப்பிட்ட இடத்திற்கு வரசொன்னார். அதன்படி அவரின் காதலியும் அவர் சொன்ன இடத்திற்கு வந்தார். அங்கு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
 
அப்போது அங்கு வந்த 4 பேர், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டனர். இதனை தடுத்த தமிழ்வானனை அந்த கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தியது. இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். அவ்வழியாக சென்றவர்கள் தமிழ்வாணனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments