Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து ஓடிய லாரி ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (10:47 IST)
திருச்சியில் ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து ஓடிய லாரி ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரிலிருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காரைக்குடியை நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரியி டயர் வெடித்ததால், தாறுமாறாக ஓடி அது ஆட்டோ மீது மோதியது.
 
இதில் ஆட்டோ டிரைவர் மோகன்(35) சம்பவ இடத்திலே உயிரிழக்க அவருடன் வந்த செந்தாமரைக்கண்ணன்(45), டி.சுப்பிரமணியன்(31) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சேகர், தப்பித்து ஓட முயற்சித்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலை முதலே டெல்டாவை குறி வைத்த மழை! இன்று எங்கெல்லாம் மழை? - வானிலை ஆய்வு மையம்!

கேள்விக்குறியாகும் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு: ஹைதராபாத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

வெறும் இரங்கல் மட்டும் தானா? பாலஸ்தீன கால்பந்து வீரர் கொலையை கண்டிக்காத UEFA.. ரசிகர்கள் கண்டனம்

விவசாயிகளிடையே கலவரத்தை தூண்டிய முன்னாள் பிரதமர்! - 30 ஆண்டுகள் சிறை!

இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் இறங்கிய தங்கம்.. இன்னும் இறங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments