Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பச்சமுத்து பாரிவேந்தர் ஆனது எப்படி? பொளந்துகட்டும் ஏ.கே.மூர்த்தி

பச்சமுத்து பாரிவேந்தர் ஆனது எப்படி? பொளந்துகட்டும் ஏ.கே.மூர்த்தி

பச்சமுத்து பாரிவேந்தர் ஆனது எப்படி? பொளந்துகட்டும் ஏ.கே.மூர்த்தி
, சனி, 11 ஜூன் 2016 (15:34 IST)
கடந்த காலங்களில் தனது தேவைகளை நிறைவேற்ற  ராமதாஸ் கால்களில் மட்டுமின்றி, அவரது இல்ல பணியாளர்கள் கால்களிலும் விழுந்து வணங்கியவர் தான் பச்சமுத்து என பாமக முன்னாள் எம்பி ஏ.கே.மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். 
 

 
இது குறித்து, பாமக துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே. மூர்த்தி வெளியிடுள்ள அறிக்கையில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவர் படிப்புக்கு வேந்தர் மூவீஸ் அதிபர் மதன் மூலம் மாணவர்களை சேர்ப்பதில் பலகோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளது.
 
எஸ்ஆர்எம் கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து ரூ.20,000 கோடி சொத்துக்களை சட்ட விரோதமாக சேர்த்துள்ளதை கண்டறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார்.
 
இதற்கு பதிலளிப்பதாகக் கூறிய பச்சமுத்து என்ற பாரிவேந்தர், ராமதாஸ் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்காமல் ராமதாஸ் மீது சேற்றை வாரி இறைத்துள்ளார். 
 
பச்சமுத்துவிடம் சட்டவிரோதமாக சேர்த்த பணத்தைத் தவிர வேறு எந்த தகுதியும் கிடையாது. அவரை எதிர்த்து ராமதாஸ் அரசியல் செய்வதாகக் கூறுவது மனநிலை பாதிக்கப்பட்டதிற்கு சமம்.
 
சமூக நீதி என்றால் என்ன என்பதை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் பாரிவேந்தர் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
 
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே பச்சமுத்து போன்றவர்களின் மோசடிக்கு பாமக துணை நிற்பது சமூக நீதியல்ல. இது போன்ற மோசடி பேர்வழிகளை எதிர்ப்பது தான் சமூக நீதியாகும்.
 
கடந்த காலங்களில் தனது தேவைகளை நிறைவேற்ற  ராமதாஸ் கால்களில் மட்டுமின்றி, அவரது இல்ல பணியாளர்கள் கால்களிலும் விழுந்து வணங்கியவர் தான் பச்சமுத்து.
 
எஸ்ஆர்எம் பல்கலைக்கழக முறைகேடுகளை  அம்பலப்படுத்திய கோபத்தில் தான் பச்சமுத்து இப்படி அவதூறுகளை அள்ளி வீசுகிறார். இதை ராமதாஸ், மன்னித்தாலும் என்னைப் போன்றவர்கள் மன்னிக்க மாட்டோம்.
 
ராமதாஸ் மீதும், அன்புமணி மீதும் கூறிய அவதூறு புகார்களுக்காக பச்சமுத்து மீது பாமக அவதூறு வழக்கு தொடரும்.
 
இந்த பிரச்சினையில் பச்சமுத்து போன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை பாமக ஓயாது என தெரிவித்துள்ளார்.
 
தற்போது பாரிவேந்தர் என்று அழைக்கப்படும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தலைவரின் கடந்த கால பெயர் பச்சைமுத்து ஆகும். இதனால், ஏ.கே.மூர்த்தி அறிக்கையில் "பச்சமுத்து" என்று வெளியானதில் இருந்து, பச்சமுத்து மீது பாமக
பாசமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூலிப்படையினர் கொட்டமடிக்கும் சென்னை: கருணாநிதி ஆவேசம்