Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்ம காதலுக்கு என் புருஷன் ஒத்துக்கல - விரக்தியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (09:32 IST)
ஈரோட்டில் கள்ளக்காதல் ஜோடி உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் ஆனந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மாரியம்மாள். சுரேஷ் கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்தார். 
 
இந்நிலையில் சுரேஷுக்கும் சின்னசாமி என்பவரது மனைவி ஜோதிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
 
ஒரு கட்டத்தில் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் சுரேஷின் மனைவிக்கு தெரியவரவே, அவர் சுரேஷை கடுமையாக கண்டித்துள்ளார். அதே போல் இவர்களின் கள்ளக்காதல் விஷயத்தை அறிந்த ஜோதியின் கணவர் சின்னசாமி, ஜோதியை கடுமையாக கண்டித்துள்ளார்.
 
இதனால் மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடி, நம் காதலை என் புருஷனும், உன் மனைவியும் ஒத்துக்கொள்ளவில்லை. இந்த உலகத்தில் இனி வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்து தங்கள் உடலில் மின்சாரம் பாய்ச்சி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார்  2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த கட்டுரையில்
Show comments