Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியை பிளேடால் அறுத்து கொலை செய்ய முயன்ற சென்னை வாலிபர் கைது

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (11:20 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாகவே காதல் மற்றும் ஒருதலைகாதல் மோதலால் ஏற்படும் கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலியை பிளேடால் அறுத்து கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பல்லாவ்ரம் பகுதியை சேர்ந்த சத்யபிரகாஷ் என்ற இளைஞர் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் தங்கியிருந்து பணிசெய்து வரும் திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் இவரை விரும்பியதாக தெரிகிறது

ஆனால் அதே நேரத்தில்  அந்த பெண் அனைவரிடமும் சகஜமாக பேசும் வழக்கத்தை உடையவர். ஆனால் தனது காதலி மற்ற ஆண்களுடன் பேசக்கூடாது என்று சத்யபிரகாஷ் கண்டிஷன் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது

இந்த நிலையில் இருவரும் பேசி சமாதானம் ஆகிவிடலாம் என்று பல்லாவரம் பூங்காவிற்கு காதலிக்கு அழைப்பு விடுத்தார் சத்யபிரகாஷ். பூங்காவில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் அதே பிரச்சனை எழுந்தது. இதுகுறித்து இருவரும் காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருந்தபோது திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடால், காதலியின் முகம் உள்பட உடலின் பல பாகங்களில் கீறி கொலை செய்ய முயற்சித்தார். இதை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூச்சல் போட்டனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லாவரம் போலீசார் சத்யபிரகாஷை கைது செய்ததோடு, படுகாயம் அடைந்த அந்த இளம்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். சத்யபிரகாஷ் மீது போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாட்டின் புதிய ஜின்னா தான் மம்தா பானர்ஜி.. பாஜக கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் ஏப்ரல் 21 வரை மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

முதல் ஸ்கெட்ச்சு பொன்முடிக்கு.. ஆளுநரை சந்திக்கும் நயினார் நாகேந்திரன்!

ஆங்கில புத்தகங்களிலும் ஹிந்தி.. கடிதத்தில் ஹிந்தி.. என்னது இது? - சு.வெங்கடேசன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments