உளுந்தூர்பேட்டை அருகே பெண் வெட்டிக்கொலை; கள்ளக்காதலன் கைது

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (11:10 IST)
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணை வெட்டிக்கொலை செய்த கள்ளக்காதலன்  போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


 
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சிறுவத்தூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பண் கொடிபவுனு(வயது 40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவருடைய  கணவர் சேகர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் கொடிபவுனு கூலி வேலை செய்து வந்தார்.
 
இந்த நிலையில் கொடிபவுனுவுக்கும், குமாரமங்கலம் காலனியை சேர்ந்த ராமு என்ற  லட்சுமணன்(32) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் இவர்களிடையே கள்ளக்காதலாக மாறியது.
 
இதனால் ராமு அடிக்கடி கொடிபவுனுடன் ஒன்றாக இருந்து வந்துள்ளார்.
 
இதுபற்றி அறிந்த கொடிபவுனுவின் உறவினர்கள் அவரை கண்டித்துள்ளனர்.
 
 இந்த நிலையில் நேற்று முன்தினம் கொடிபவுனு, குமாரமங்கலம் சென்றார். அப்போது அங்கு தேடிவந்த  ராமுவிடம், எனது மகள்கள் பெரியவர்களாகி விட்டனர். எனவே இனிமேல் என்னை தேடி வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராமு கொடிபவுனை சரமாரியாக தாக்கியுள்ளாராம்.
 
இந்த நிலையில் கொடிபவுனுவை பார்க்க  நேற்று காலை ராமு சிறுவத்தூர் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமு, கொடிபவுனை அரிவாளால் வெட்டினார். . இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே ராமு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.  இந்த சம்பவம் அறிந்த போலீசார் கொடிபவுனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப் பவைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமுவை உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஹிஜாப் சர்ச்சை: கொச்சி பள்ளியில் இருந்து மாணவிகள் விலகல்..!

சிவகாசியில் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை.. கடந்த ஆண்டை விட ரூ.1000 கோடி அதிகம்..!

சென்னையில் தீபாவளி தினத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்..!

அயோத்தியில் 26 லட்சம் தீபங்கள்! மீண்டும் கின்னஸ் சாதனை! - யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

சுயசார்புடன் தீபாவளியை பெருமிதமாக கொண்டாடுவோம்! - நாட்டு மக்களுக்கு பிரதமர் தீபாவளி வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments