Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பற்றி எரிகிறது எண்ணூர் சுனாமி குடியிருப்பு: பட்டாசு வெடித்ததால் வந்த வினையா?

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (08:30 IST)
பற்றி எரிகிறது எண்ணூர் சுனாமி குடியிருப்பு
பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்ற கூறினார் என்பதும், அதன்படி கோடிக்கணக்கானோர் சரியாக 9 மணி முதல் 9.09 வரை அகல் விளக்கை ஏற்றி நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் ஒன்று கூடி இருப்பதை நிரூபித்தனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஒரு சிலர் மட்டும் ஆர்வக்கோளாறில் பட்டாசு வெடித்து தங்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் பட்டாசு வெடித்ததால் ஒரு சில இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் என்ற பகுதியில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் பட்டாசு வெடித்ததால் அந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது என்பதை பார்ப்போம். இந்த நிலையில் சென்னை எண்ணூரில் ஒரு சிலர் பட்டாசு வெடித்ததால் சுனாமி குடியிருப்புக்கு அருகில் உள்ள பகுதியில் திடீரென தீப்பிடித்தது
 
அந்த பகுதியில் ஏற்கனவே குப்பைகள், காய்ந்த செடியின் இலைகள் ஆகியவை இருந்த காரணத்தினால் அந்த பகுதியில் அந்த இடத்தில் தீ பிடித்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எண்ணூர் தீயணைப்பு துறையினர் மற்றும் திருவான்மியூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஒரு சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்
 
இருப்பினும் அந்த பகுதியில் பெரும் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இது குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் நேற்று இரவு 9 மணிக்கு ராக்கெட் பட்டாசு வெடித்ததால் அவற்றின் ஒரு பகுதி காலி மைதானத்தில் இருந்த காய்ந்த இலைச் சறுகுகள் மற்றும் குப்பைகளில் விழுந்து தீ பிடித்ததாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments