உணவக குடிநீர் டிரம்முக்குள் செத்த எலி...வாடிக்கையாளர் அதிர்ச்சி

Sinoj
சனி, 9 மார்ச் 2024 (17:54 IST)
தாம்பரம் அருகே சாஜ் என்ற உணவகத்தின் குடிநீர் டிரம்முக்குள் எலி செத்துக்கிடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 
சமீபகாலமாகவே ஓட்டல்களில் சுகாதாரமற்ற  முறையில் சமைப்பதாகவும், சுத்தமில்லாமல் சமையலறையைப் பயன்படுத்தி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
 
சுகாதாரமற்ற முறைகளில் ஓட்டல்களில் சமைக்கப்படுவதால், அதைச் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு உடல்உபாதைகள் ஏற்படுகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டிருப்பதை செய்திகளின் மூலம் அறிந்திருப்போம்.
 
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் தமிழகத்தில்  உள்ள ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 
 
இந்த  நிலையில், தாம்பரம் அருகே சாஜ் என்ற உணவகத்தின் குடிநீர் டிரம்முக்குள் எலி செத்துக்கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தனர்.
 
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில், இந்த உணவகத்தில் சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் பணம் கொடுக்க வேண்டாம் என உரிமையாளர் கூறி, அவர்களிடம் மன்னிப்பு கேட்ட நிலையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments