Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அமைச்சரவையில் மாற்றமா.? ஆளுநருடன் தலைமைச் செயலாளர் சந்திப்பு.!!

Senthil Velan
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (17:47 IST)
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்து பேசிய நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்திப்பு மேற்கொண்டார். தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற பின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து முருகானந்தம் வாழ்த்துப் பெற்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 3 மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதியவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. 
 
அமைச்சராக இருக்கும் மெய்யநாதன் அல்லது சி.வி.கணேசன் இருவரில் ஒருவரின் பதவி பறிக்கப்பட உள்ளதாகவும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ALSO READ: "தவறை மூடி மறைக்காதீர்கள்".! பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வார்னிங்.!!

இந்த சந்திப்பை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் தொடர்பான செய்திகள் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments