Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. தேர்தல் முடிந்த பின் வழக்கு தொடருங்கள்..!

Mahendran
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (12:16 IST)
திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
மதுரையைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்  வாக்குப்பதிவு தவிர மற்ற அனைத்து தேர்தல் நடைமுறைகளும் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
 
மேலும் ஒருவேளை மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. 
 
வேட்பு மனு முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை, தகவல்கள் மறைக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்த நிலையில் நெல்லை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்கவும் மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால் அந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராமில் புதிய அசத்தலான அப்டேட்.. ரீல்ஸ் வீடியோ பதிவு செய்பவர்கள் குஷி..!

வெள்ளை டீ சர்ட் இயக்கம்.. இளைஞர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு..!

ஐஐடி இயக்குனரின் கோமியம் குறித்த கருத்து.. அமைச்சர் பொன்முடி கண்டனம்..!

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

சட்டவிரோத கல்குவாரி.. தட்டிக் கேட்டவர் லாரி ஏற்றிப் படுகொலை! - அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments