Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு..

Siva
சனி, 10 ஆகஸ்ட் 2024 (11:16 IST)
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பகுஜன் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில நாட்களுக்கு முன்னால் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை ஏற்று நடத்தும் காவல்துறை அதிரடியாக சிலரை கைது செய்துள்ளது என்பதும் குறிப்பாக திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட ஒரு சில கட்சிகளை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து ஏற்கனவே ஆவேசமாக சில கருத்துக்களை தெரிவித்த இயக்குனர் பா ரஞ்சித் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய கோரி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments