நின்று கொண்டிருந்த பேருந்தில் மோதிய கார்! 5 பேர் பரிதாப பலி! - ராமேஸ்வரத்தில் சோகம்!

Prasanth Karthick
ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (09:37 IST)

ராமேஸ்வரம் அருகே நின்றுக் கொண்டிருந்த பேருந்து மீது கார் மோதிய சம்பவத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ராமேஸ்வரம் அருகே உள்ள பிரப்பன்வலசை என்ற இடத்தில் அரசு பேருந்து ஒன்று சாலையோரம் நின்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது படுவேகமாக மோதியது.

 

இதில் கார் சுக்கலாக நொறுங்கிய நிலையில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அதுகுறித்து மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அதிகாலையே நடந்த இந்த கோர விபத்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

இந்தியா ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு அல்ல, அனைவருக்கும் சொந்தமானது: முதல்வர் ஸ்டாலின்

2 நாள் சரிவுக்கு பின் இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை: இன்றைய நிப்டி நிலவரம்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.95,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி.!

கண்டுகொள்ளாத பாஜக!.. கடுப்பில் செங்கோட்டையன்!. தவெகவில் இணைவதன் பின்னணி!...

அடுத்த கட்டுரையில்
Show comments