Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் ஒரே ஆண்டில் இடிந்து விழுந்த பாலம்: பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (17:56 IST)
பொதுவாக ஒரு பாலம் கட்டினால் குறைந்தது ஐம்பது வருடங்களுக்கு கியாரண்டி இருக்கும். ஆனால் நெல்லையில் கடந்த ஆண்டு கட்டி முடித்து திறக்கப்பட்ட பாலம் நேற்று இடிந்து விழுந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் தளவாய்புரம், ஆவரந்தலை ஆகிய கிராமங்களை இணைக்கும் பாலம் ஒன்று கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. ஆனால் நேற்று அடித்த ஒக்கி புயலின் காரணமாக இந்த பாலத்திற்கு கீழ் இருந்த நம்பியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் நேற்று திடீரென இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் தளவாய்புரம், ஆவரந்தலை கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தரம் குறைந்த முறையில், சிமிண்டு உடன் அதிக மண்கொண்டு பாலம் கட்டப்பட்டதால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கட்டிமுடிக்கப்பட்டு ஓர் ஆண்டே ஆன நிலையில், பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments