சூர்யாவின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (16:50 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிலும் தளபதி விஜய் வீட்டிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதும் அதன் பின்னர் விசாரணையில் இரண்டுமே வதந்தி என்பதும் தெரியவந்தது. இருப்பினும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது ரஜினி, விஜய்யை அடுத்து சூர்யாவின் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் பழைய அலுவலகமான ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. இதனை அடுத்து சூர்யாவின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்
 
சோதனைக்கு பின் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மர்ம அழைப்பு புரளி என்பது தெரியவந்து உள்ளது. இதனை அடுத்து சூர்யாவின் அலுவலகத்திற்கு வெடி குண்டு வைத்ததாக மிரட்டிய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த மர்ம தொலைபேசி அழைப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...

பிகார் பெண் எம்.பி. இரண்டு முறை வாக்களித்தாரா? இரு கைகளிலும் மை இருந்ததால் சர்ச்சை..!

8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments