புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி..! போலீசாரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்..!!

Senthil Velan
திங்கள், 4 மார்ச் 2024 (21:01 IST)
புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமியை கண்டுபிடிக்காத காவல் துறையினரை கண்டித்து பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
புதுச்சேரி சோலை நகரை சேர்ந்தவர்  நாராயணன், இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இரண்டாவது மகளான ஆர்த்தி (9) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். 
 
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஆர்த்தி அவரது வீட்டருகே விளையாடி இருந்தபோது காணாமல் போனார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமி கடந்து சென்ற பாதைகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு நேற்று பிற்பகல் முதல் சோலை நகர் பகுதியில் வீடு வீடாக சென்று போலீசார்  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் காணாமல் போன சிறுமியை இரண்டு தினங்களாக தற்போது வரை கண்டுபிடிக்காததை கண்டித்து சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள்,  கிழக்கு கடற்கரைச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ALSO READ: கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..! கணவன் இறந்த தூக்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி..!!
 
இதனைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments