Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வன்புணர்வு செய்து 5 வயது சிறுமியைக் கொன்ற 14 வயது சிறுவன்

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (12:40 IST)
தூத்துக்குடியில் 5 வயது சிறுமியை 14 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, சத்தமிட்ட சிறுமியைக் கொன்று தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்  கொண்டே வருகிறது. குறிப்பாக சில மனித மிருகங்கள், சிறுமிகள் என்றும் பாராமல் அவர்களுக்கு பாலியல் தொல்லை செய்கின்றனர். ஆனால் சிலர் அதற்கும் ஒரு படி மேலே போய், சிறுமிகளை கற்பழித்து கொலையும் செய்கின்றனர்.
 
தூத்துக்குடி மாவட்டம், கீழத்தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகள் சிவகாமி(5). இவர் அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இவரது வீட்டருகே உள்ள கண்ணன் (14) என்ற சிறுவன்,  சிறுமி சிவகாமியோடு விளையாடி வந்துள்ளார். இதை இருவரது பெற்றோர்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
 
இந்நிலையில் பள்ளியில் இருந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்ற கண்ணன், வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி சிவகாமி அழுது சத்தம் போடவே சிறுமியின் கழுத்தை  துண்டால் இறுக்கிக் கொலைசெய்து, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை சிறுமியின் உடலில் ஊற்றித் தீ வைத்துவிட்டு ஓடிவிட்டான். சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுமியைக் கொலைசெய்த சிறுவன் கண்ணனை  போலீஸார் தேடி வருகின்றனர்.
 
இன்றைய இளம் தலைமுறையினர் சீர்கெட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்