Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9ஆம் வகுப்பு மாணவனிடம் பள்ளி கட்டணத்தை திருடிய மர்ம நபர்

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (14:42 IST)
வங்கியில் பள்ளி கட்டணம் செலுத்த சென்ற மாணவனிடம் வங்கி அதிகாரி போல் நடித்து மர்மநபர் ஒருவர் ரூ:12,500 பணம் திருடியுள்ளார்.


 


சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சுதர்சன் மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். சுதர்சன் பள்ளி கட்டணம் செலுத்த தன் தந்தையிடம் ரூபாய் 12,500ஐ வாங்கிக் கொண்டு வங்கிக்கு சென்றார்.

வங்கியில் மர்ம நபர் ஒருவர் தான் வங்கி அதிகாரி என்றும், பணத்தை கணக்கில் செலுத்த தன்னிடம் தரும்படி கூறியுள்ளார். சுதர்சனும் வங்கி அதிகாரி என்று நினைத்து அந்த நபரிடம் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபர் அந்த இடத்தை விட்டு தப்பி சென்றார்.

சுதர்சன் சிறிது நேரத்திற்கு பிறகு தான் ஏமாந்து போனதை உணர்ந்துள்ளான். உடனே வீட்டுக்கு சென்று தந்தையிடம் நடந்த நிகழ்வை கூறியுள்ளான். திருட்டு குறித்து பெருமாள் காவல்துறையில் புகார் அளித்தார்.

பெருமாளின் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் திருடிய நபரை அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments