Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் 97 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு நவம்பரில் 104 செ.மீ அளவு மழை பதிவு

சென்னையில்  97 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு நவம்பரில் 104 செ.மீ அளவு மழை பதிவு
, செவ்வாய், 24 நவம்பர் 2015 (14:21 IST)
சென்னையில், 97 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு நவம்பரில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதல் மழை பெய்யலாம்' என்று வானிலை ஆய்வு மையம் கணிக்கப்பட்டுள்ளது. 


 

 
வட கிழக்கு பருவ மழை, அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை பெய்யும். குறிப்பாக, நவம்பரில் அதிக அளவு மழை பெய்யும். இந்நிலையில், 15 நாட்களுக்கு மேல், சென்னை, கடலோர மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட நான்கு காற்று அழுத்தத் தாழ்வு நிலைகளால் தான் சராசரிக்கும் அதிகமான மழை கிடைத்துள்ளது. 
 
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளி விவரப்படி, இதற்கு முன், 1918 நவம்பரில், 108 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. நடப்பு ஆண்டு நவம்பரில் 1 முதல், 22ஆம் தேதி வரை சென்னையில், 104 செ.மீ., மழை பெய்துள்ளது. இன்னும், 4 செ.மீ., மழை பெய்தால், இதுவே நவம்பரில் பெய்த அதிகபட்ச மழையாக இருக்கும் என்றும் வரும் நாட்களில், அதற்கான வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil