அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 96 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தி.மு.க.வினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை சிறையில் அடைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 96 ஆயிரம் பேரில் 12,960 பேர் பெண்கள் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
கைதானவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.