Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்

தமிழகம்
Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (20:25 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 921 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 818,935 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 921 பேர்களில் 252 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 13 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 12135 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
மேலும் தமிழகத்தில் இன்று 1029 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 798,420 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 66808 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 139,54,943 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு.. 20 காசுகள் உயர்ந்து வர்த்தகம் முடிவு..!

வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை.. தொப்பியுடன் இப்தார் விருந்தில் விஜய்..!

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு.. மறு மதிப்பீட்டுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

ஐந்து ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலக் குழு செயல்படவில்லை.. ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments