பணிமனை இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் பலி

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (10:39 IST)
பொறையாரில் பணிமனை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நாகை மாவட்டத்தில் உள்ள பொறையாரில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பணிமனைக் கட்டிடம் உள்ளது. அங்கு சில ஊழியர்கள் நேற்று இரவு ஓய்வு எடுத்து வந்தனர். அந்நிலையில், நேற்று நள்ளிரவு அந்த கட்டிடத்தின் மேற்கூரை திடீரெனெ இடிந்து விழுந்தது. அதில், போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கட்டிட இடுபாடுகளில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கி உயிரிழந்தனர். 
 
அதன்பின் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில், சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் என்ற போக்குவரத்து ஊழியர் தற்போது மரணமடைந்தார். இதனால், பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 
 
இடிந்து விழுந்த பணிமனை கட்டிடம் 70 வருடங்கள் பழைமையானது. அந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் இருப்பதாக பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
 
இந்த சம்பவம் அந்த பகுதி போக்குவரத்து ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments