Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்திற்கு தொடரும் மழை - இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (08:23 IST)
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

 
கடந்த சில மாதங்களாக வெயிலின் வெப்பம் காரணமாக சென்னை மக்கள் தத்தளித்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான தட்ப வெட்பம் தற்போது இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
அதிலும் நேற்று மாலை தொடங்கி விடிய விடிய சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை தியாகராய நகர்,கோடம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் சுரங்க பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதாகவும்,ஒரு சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மழையால் ஏற்பட்ட பாதிப்பின் மீட்புப் பணியை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது: குடும்ப சண்டையா?

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மெமு ஏ.சி. ரயில்: தெற்கு ரயில்வே தகவல்..!

ஃபெங்கல் புயல்: இன்றும் நாளையும் அதி கனமழை: 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

இசைவாணி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடிகை கஸ்தூரியின் பதில்

ரூட்டை மாற்றிய புயல்.. சென்னை பக்கம் திரும்புகிறதா? இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போகுதோ! - குழப்பத்தில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments