Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

86 வயதில் பட்டம் பெற்ற விவசாயி

86 வயதில் பட்டம் பெற்ற விவசாயி
, புதன், 1 ஜூன் 2016 (19:45 IST)
கோவையில் 86 வயது விவசாயி பண்ணைத்தொழில்நுட்ப படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.


 

 
கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது போலும் படிப்பதற்கு வயது தகுதியில்லை என்பது போலும் தனது 86 வயதில அவரது ஆரவத்தை நிருபிக்கும் வகையில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.
 
கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த அன்பு சுந்தரானந்தம் என்பவர் இளமைப் பருவத்தில் வறுமை காரணமாக பட்டம் பெற வாய்ப்பு இல்லாததாலும், விவசாயத்தில் மீதுள்ள ஆர்வத்தாலும் தனது முதிர்ச்சி வயதிலும் 4 ஆண்டுகள் படிப்பை ஆர்வமுடன் படித்து பட்டம் பெற்றுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
விவசாயம் வளர்ச்சி பெற கல்வி அறிவு வேண்டும்.
 
மற்ற விவசாயிகளுக்கு நான் கற்றது மூலம் விவசாய தொழில்நுட்பங்களையும், இயற்கை முறை விவசாயம் குறித்தும் பயிற்று வருகிறேன்.
 
இளைஞர்கள் விவசாயத்தை கற்பதில் காட்டும் ஆர்வத்தை, விவசாய நிலத்தில் இறங்கி வேலை செய்வதில் காட்டுவதில்லை.
 
விவசாயத்தில் எனது அறிவை மேலும் அதிகரிக்க தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் எம்.எப்.டெக் பண்ணைத் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் படிக்க திட்டமிட்டுள்ளேன், என்றார்.
 
இவர் தற்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் பி.எப்.டெக் பண்ணைத் தொழில்நுட்ப படிப்பில் பட்டம் பெற்று இருக்கிறார்.     

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய சேவை வரி: சாப்பாடு முதல் போன் ரிசார்ஜ் வரை கட்டணங்கள் உயர்வு