Webdunia - Bharat's app for daily news and videos

Install App

69 வயது மனைவியை தூக்கி சென்ற 76 வயது முதியவர்: தேர்தலுக்கு பயன்படுத்திய வீல்சேர்கள் எங்கே?

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (21:42 IST)
69 வயது மனைவியை தூக்கி சென்ற 76 வயது முதியவர்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதன் காரணமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் அந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது
 
கோவையில் 76 வயது நபர் ஒருவர் தனது 69 வயது மனைவியை மருத்துவமனைக்கு கைகளாலேயே சுமந்து மருத்துவமனை வாசலில் இருந்து மருத்துவமனைக்கு கைகளில் தூக்கிக் கொண்டு சென்ற காட்சியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 
 
மருத்துவமனை வாசலில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு வீல்சேர் கூட இல்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் வயதானவர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான வீல்சேர்கள் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே 
 
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களிடம் காட்டும் அக்கரையை கொரோனா பரவல் நேரத்தில் காட்டப்படாதது ஏன் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. இனிமேலாவது வயதானவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வீல் சேர்கள் வசதி செய்து கொடுக்க அனைத்து மருத்துவமனை நிர்வாகமும் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments