Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (19:35 IST)
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அடிக்கடி ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது திடீரென தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “சென்னை அமலாக்கப் பிரிவின் மண்டல காவல்துறை தலைவராக(ஐ.ஜி.) செந்தாமரைக் கண்ணன், டான்ஜெட்கோ (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்) லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக (டிஜிபி) பிராஜ் கிஷோர் ரவி, சென்னை சைபர் கிரைம் பிரிவு -1ன் காவல் கண்காணிப்பாளராக சுதாகர் ஆகியோரை நியமித்துள்ளது.
 
மேலும், தமிழக காவல் தலைமையக மண்டல தலைவராக (ஐ.ஜி.) ஜோஷி நிர்மல், சென்னை காவல் தொழில்நுட்ப சேவை பிரிவின் துணைத் தலைவராக(ஏ.டி.ஜி.பி) அமரேஷ் புஜாரி, ஊனமாஞ்சேரி காவல் அகாடமியின் துணைத் தலைவர்(ஏ.டி.ஜி.பி) மற்றும் இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் காவல்துறை செயலாக்கப் பிரிவின் கூடுதல் டிஜிபியாக சந்தீப் மிட்டலை நியமனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments