Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ பிடிக்கவில்லை; தற்கொலை செய்கிறேன்: 6-ஆம் வகுப்பு மாணவியின் கடைசி நிமிடங்கள்!

வாழ பிடிக்கவில்லை; தற்கொலை செய்கிறேன்: 6-ஆம் வகுப்பு மாணவியின் கடைசி நிமிடங்கள்!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2016 (18:50 IST)
தருமபுரி மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி ஒருவர் தனக்கு வாழ பிடிக்கவில்லை என கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


 
 
தருமபுரி மாவட்டம் இண்டூர் சின்னகனகம் பட்டியை சேர்ந்த சண்முகம் என்பரது மகள் தர்ஷினி அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார்.
 
அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மாணவி தர்ஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியின் தற்கொலை குறித்து அவரது பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி தோழிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த விசாரணையில் மாணவி தர்ஷினி தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.
 
அன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவி சோகமாகவே இருந்துள்ளார். தான் இனிமேல் பள்ளிக்கு வர மாட்டேன் என சக மாணவிகளிடம் கூறிய அவர் தன்னிடம் இருந்த பேனா, பென்சில் போன்ற பொருட்களை தோழிகளுக்கு கொடுத்துள்ளார்.
 
எதற்காக இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு என்னை இனிமேல் பார்க்க முடியாது என் நினைவாக இதை வைத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதன் பின்னர் வீட்டுக்கு வந்த மாணவி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

திடீரென 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய இன்போசிஸ்.. அதிர்ச்சியில் வேலை இழந்தவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments