போக்குவரத்து விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து: சென்னை காவல்துறை..!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (18:55 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக தானியங்கி கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் டிசம்பர் மூன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 6670 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த 3-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட 6,670 வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments