பைனான்சியர் வீட்டில் சிக்கிய 65 கோடி... விஜய்க்கு அதிகரிக்குமா நெருக்கடி?

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (11:52 IST)
IT Raid

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.65 கோடி பறிமுதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 
 
பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களில் வீடுகளில் நேற்று ஒரே நேரத்தில் சுமார் 20 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதோடு சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் ரெட்டு நடைபெற்றது. 
 
நேற்று முதல் நடைபெற்று வரும் ஏஜிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் இதுவரை ரூபாய் 24 கோடி முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதேபோல தற்போது சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.65 கோடி பறிமுதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 
 
அன்புச்செழியன் சென்னை வீட்டில் இருந்து 50 கோடியும், மதுரை வீட்டில் இருந்து 15 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் உண்மையா என்பது குறித்து வருமான வரித்துறையினர் அதிகார பூர்வமாக தகவல் வெளியிட்டால் மட்டுமே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏஜிஎஸ் நிறுவனத்தின் ரெய்ட் விஜய் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இப்போது சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தால், வருமான வரித்துறையினர் விஜய் வீட்டின் சோதனையில் மேலும் நெருக்கடி கொடுக்க வாய்புள்ளது என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை புறநகரில் இன்றிரவு முதல் மழை தீவிரமடையும்: தமிழ்நாடு வெதர்மேன்

அரசியலுக்கு வருகிறாரா பிரியங்கா காந்தியின் மகன்? ராபர்ட் வதேரா விளக்கம்..!

பிரபல அரசியல் தலைவர் மற்றும் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை.. 2 பான்கார்டு வைத்திருந்த வழக்கு..!

'இந்தியா' கூட்டணிக்கு தலைமையை மாற்ற வேண்டும்; அகிலேஷ் யாதவ் பெயரை முன்னிறுத்திய சமாஜ்வாடி!

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு.. கலவரம் செய்பவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments