Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: சேலத்தில் தொடரும் கொடூரம்

Webdunia
திங்கள், 4 ஜூலை 2016 (09:31 IST)
சேலம் மாவட்டத்தில் 6 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதில் காவல் துறையினர் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.


 

 
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களாகவே பெண்கள் எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. மேட்டூர் அருகே தெலுங்னுர் பகுதியில் நேற்று தர்ஷினி என்ற 6 வயது கொலை செய்யப்பட்டார்.
 
அது தொடர்பாக காவல் துறையினர் ராமன் என்பவரையும் அவரது பேரன் திருமூர்த்தி என்பவரையும் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சிறுமி சமையல் பாத்திரத்தில் வைத்து மறைக்கப்பட்டிருந்ததாலும், அந்த சிறுமியின் அருகில் பூஜை பொருட்கள் கிடந்ததாலும் காவல் துறையினர் கொலையில் சந்தேகப்பட்டனர்.
 
கைது செய்யப்பட்ட ராமனிடம் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் தர்ஷினி பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து அந்த ஊர் மக்கள் ராமனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
 
தற்போது தர்ஷினி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராமன் கடந்த 5 மாதங்களுக்கு முன் தான் ஒரு பாலியல் குற்ற்ச்சாட்டில் சிக்கி ஊர் மக்களால் அடித்து விரட்டப்பட்டார். அதைத்தொடர்ந்து ராமன் நேற்று முன்தினம் தான் ஊருக்குள் வந்துள்ளார். ஊருக்குள் வந்த முதல் நாளே இத்தகைய கொடூரமான செயலை செய்துள்ளார்.
 
இது போன்ற கொடூரமான எண்ணம் கொண்ட மனிதர்களுக்கு கட்டாயம் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். சுவாதி கொலை வழக்கில் குற்ற்வாளியை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் சிறுமையை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த கொடூரமான வக்ரம் புத்தி கொண்ட ராமன் போன்றவர்களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்.
   
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்