Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி கல்வி: தமிழக அரசு

Webdunia
ஞாயிறு, 21 ஜூன் 2009 (12:25 IST)
இந்தக் கல்வியாண்டு முதல் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள 4,200 நடுநிலை மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் இந்த கணினி (கம்ப்யூட்டர்) கல்வி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை விடுத்துள்ள அறிவிப்பில், முதற்கட்டமாக 6ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு வாரமும் 2 வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவன பொறியாளர்கள் மூலம் ஏற்கனவே ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கணித ஆய்வகங்கள ், ஆங்கில மொழித்திறன ், கம்ப்யூட்டர் கல்வி என 3 முக்கிய அம்சங்களை பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments