தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 114 பேர் பலி: பாதிப்பு எத்தனை பேர்?

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (19:22 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 5914 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 5914 பேர்களில் 976 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,121 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றும் 1000ஐ குறைந்த கொரோனா பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை  5,041 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 6037 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை  2,44,675 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 மாவட்டங்களை இரவில் செய்யப்போகும் கனமழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கரூர் விவகாரம்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் புதிய தலைமுறை நீக்கமா? அண்ணாமலை கண்டனம்..!

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள்.. தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற கர்ப்பிணி; அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு மாற்றமா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments