Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பத்திரப் பதிவுத் துறையில் அரசுக்கு 500 கோடி ரூபாய் வரை இழப்பு - கருணாநிதி குற்றச்சாட்டு

பத்திரப் பதிவுத் துறையில் அரசுக்கு 500 கோடி ரூபாய் வரை இழப்பு - கருணாநிதி குற்றச்சாட்டு
, வியாழன், 23 ஏப்ரல் 2015 (21:19 IST)
பத்திரப் பதிவுத் துறையில் அரசுக்கு 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டியுள்ளார்.
 
இது குறித்து தனது முகநூல் பதிவில் கேள்வி பதில் வடிவில் குறிப்பிட்டுள்ளார்.
 

 
கேள்வி :- பத்திரப் பதிவுத் துறையில் செய்யப்பட்டுள்ள முறைகேடுகள் காரணமாக 500 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகச் சொல்கிறார்களே?
 
பதிவுத் துறையிலே மட்டுமா முறைகேடுகள் நடக்கின்றன? ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இதற்காக விசாரணைக் கமிஷன் அமைத்து ஆய்வு செய்தால்தான் பல உண்மைகளை ஆதாரப்பூர்வமாக மெய்ப்பிக்க முடியும். பத்திரப் பதிவுத் துறையைப் பொறுத்த வரையில், சொத்துக்களை வாங்கும்போதோ, விற்கும்போதோ, அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு மதிப்பின்படி தான் சொத்து மற்றும் நிலங்களை பதிவு செய்ய வேண்டும்.
 
அதிலே வணிகப் பகுதி, குடியிருப்புப் பகுதி, பின்தங்கிய பகுதி என நிலங்களைப் பல்வேறு வகைகளாகப் பிரித்து, அதற்கேற்ப முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல், வழிகாட்டு மதிப்பீட்டில் உள்ளதைவிட குறைவாக மதிப்பிட்டு பணம் வசூலிக்கப்படுகிறதாம்.
 
2014ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை தமிழகம் முழுவதும் தணிக்கை அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த முறைகேடுகளைக் கண்டுபிடித்திருக் கிறார்கள். இதன் காரணமாக மட்டும் அரசுக்கு 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட் டிருக்கிறதாம்.
 
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil