Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஆடுகளை அடித்து விட்டு அசால்ட் நடைபோடும் சிறுத்தை! – மதுரை கிராம மக்கள் அச்சம்!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (11:02 IST)
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் - 4 பேரின் 5 ஆடுகளை கடித்து தின்றதால் பொதுமக்கள் அச்சம். சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட எஸ்.மேலப்பட்டி கிராமம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது.

இந்த கிராமத்திற்குள் நேற்று இரவு வந்த சிறுத்தை கிராமத்தில் உலா வந்தோடு, அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம், சுப்பிரமணி, சுந்தரம் மற்றும் ரவி என்பவர்களின் 5 ஆடுகளை கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த கிராமத்தில் சிறுத்தை உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வதற்காக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சிறுத்தையை காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும், கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கைகள் எடுத்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments