Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலாபவன் மணி உடலில் கலந்திருந்த 45 மில்லி கிராம் மெத்தனால்: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 15 ஜூன் 2016 (12:52 IST)
பிரபல நடிகர் கலாபவன் மணி (45) தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.
 


கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது உடல் உள்ளுறுப்புகளை ரசாயன பரிசோதனை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்த போது, அவரது உடலில் ‘குளோர்பைரிபோஸ்’ என்ற பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது தெரிய வந்தது.

கலாபவன்மணிக்கு மது பழக்கம் உண்டு. இதனால் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனாலும் மது பழக்கத்தை விட முடியாத அவர் பீ மட்டும் அருந்தி வந்தார். பீரில் இந்த அளவிற்கு ரசாயனம் கிடையாது என்பதால் யாரோ அதனை கலந்து கொடுத்துள்ளதாக சந்தேக எழுந்தது.

இந்நிலையில் கலாபவன்மணியின் கல்லீரல், சிறுநீரகம், ரத்தம் உள்பட உடல் உறுப்புகள் ஐதராபாத்தில் உள்ள மத்திய ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தற்போது அந்த அறிக்கை வெலியிடப்பட்டுள்ளது. அதில் கலாபவன்மணியின் உடலில் மெத்தனால் என்ற ரசாயன பொருள் 45 மில்லி கிராம் அளவுக்கு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுவே அவரது உயிரிழப்புக்க்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மதுவினால் இந்த அளவுக்கு மெத்தனால் உடலில் கலக்க வாய்ப்பு இல்லை, எனவே கலாபவன் மணிக்கு யாரோ பீரில் மெத்தனாலை கலந்து கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை அடுத்து விசாரணை முடிக்கி விடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments