Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

40 நா‌ளி‌ல் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவு வெ‌ளி‌‌யீடு - ஆர்.நடராஜ்

40 நா‌ளி‌ல் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவு வெ‌ளி‌‌யீடு - ஆர்.நடராஜ்
, சனி, 23 ஜூன் 2012 (12:47 IST)
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகளை பொறுத்தவரை 40 நாட்களுக்குள் அறிவிக்கப்பட்டு, அடுத்த 15 நாட்களில் கவுன்சிலிங் மூலம் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்று தேர்வாணைய தலைவர் ஆர்.நடராஜ் கூறினார்.

கோவை‌யி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்து 793 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு ஜூலை 7‌ஆ‌ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 244 இடங்களில் 5 ஆயிரம் மையங்களில் 50 ஆயிரம் தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வுக்கு இதுவரை 12 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.

இதற்காக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேர்வு முதன்மை அதிகாரியாக செயல்படுவார்கள். இதன் அடிப்படையில் தற்போது கோவை மேற்கு மண்டலத்தில் உள்ள மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட சூப்பிரண்டுகளுடன் நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தேர்வில் முறைகேடுகளை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது.

குரூப்-4 தேர்வில் பதற்றமான தேர்வு மையங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும். அனைத்து தேர்வு மையங்களிலும் வெளிப்படை தன்மை, நேர்மையான முறையில் தேர்வு நடைபெற வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும். வினாத்தாள் வருவதில் இருந்து, தேர்வு எழுதி அதை சீல் வைக்கும் வரை வீடியோ கேமராவில் பதிவு செய்யப்படும்.

அடுத்த கட்டமாக குரூப்-2 தேர்வுகள் நடைபெற உள்ளன. இதில் 3633 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த தேர்வுக்காக தினந்தோறும் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. மொத்தம் 15 லட்சம் விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டமாக 1300 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்காக 15 லட்சம் விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் மாத இறுதிக்குள் முக்கியமான தேர்வுகள் அனைத்தும் நடைபெற உள்ளது.

அரசு பணியாளர் தேர்வு முடிவுகளை பொறுத்தவரை 40 நாட்களுக்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன் பின்னர் என்ஜினீயரிங் கல்லூரிக்கான கவுன்சிலிங் போன்று, கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் 15 நாட்களுக்குள் பூர்த்திசெய்யப்படும். டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒருமுறை என்ற நிலை மாறி, தேவைப்பட்டால் ஆண்டுக்கு இருமுறை கூட நடத்தப்படும் எ‌ன்ற ந‌டரா‌ஜ் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil